​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்

Published : Oct 21, 2019 7:23 PM

பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்

Oct 21, 2019 7:23 PM

தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வருவாய்த்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக வருவாய் துறை, உள்துறை, போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வருவாய்த்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக ஒருவார காலத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.