​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயமான தமிழக மீனவர்கள் தொடர்பான வழக்கு - வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

Published : Oct 21, 2019 7:18 PM

மாயமான தமிழக மீனவர்கள் தொடர்பான வழக்கு - வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

Oct 21, 2019 7:18 PM

ஓமன் நாட்டில் மீன்பிடிக்கச் சென்று மாயமான தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்கக்கோரிய வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன், காசிலிங்கம் ஆகியோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடன் ஓமன் நாட்டிலுள்ள மஜ்ஜிதா தீவில் மீன்பிடி தொழில் செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் வீடு திரும்பாத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர், வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நல இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ஆகியோர்  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.