​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அண்ணாசாலை-செனடாப் சாலையில் சோதனை முன்னோட்டம் மீண்டும் தொடரப்பட்டது

Published : Oct 21, 2019 6:51 PM

சென்னை அண்ணாசாலை-செனடாப் சாலையில் சோதனை முன்னோட்டம் மீண்டும் தொடரப்பட்டது

Oct 21, 2019 6:51 PM

சென்னை அண்ணாசாலை-செனடாப் சாலையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சோதனை முன்னோட்டம் மீண்டும் தொடரப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைமுறையில் இருந்தது.

இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, கடந்த இரு மாதங்களுக்கு முன், சேமியர்ஸ் சாலையிலிருந்து நந்தனம் சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வி.என் ரோடு வழியாக தி.நகர் செல்லும் வகையில் இரு வழி பாதையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், செனடாப் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் நேரே வலது பக்கமாக திரும்பி அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி செல்லும் விதமாக கடந்த 3 நாட்கள் சோதனை முன்னோட்டம் நடைபெற்றது.

இதனால் அந்த வழியை பயன்படுத்தி சென்ற வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, நேரமும் மிச்சமாவதாக கருத்து தெரிவித்தனர். இதனால், அந்த வழிதடத்தில் சோதனை முன்னோட்டத்தை மீண்டும் நீட்டித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த வழிதடம் நேராக கல்லூரி, பள்ளிகள் உள்ள எஸ்.ஐ.டி பகுதி வழியாக செல்வதால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்டு, அதன்பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.