​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணிகள் பயணம்

Published : Oct 21, 2019 5:18 PM

அரசு பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணிகள் பயணம்

Oct 21, 2019 5:18 PM

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே, அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக கொட்டிய மழை நீரில், குடைபிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.

திருவட்டாறு பணிமனையிலிருந்து குலசேகரம்- குளச்சல் வழிதடத்துக்கு, இயக்கப்பட்ட தடம் எண் 332 பேருந்து, பயணிகளுடன் சென்றபோது, திடீரென மழை பெய்தது. இதில் மேற்கூரையிலிருந்த ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே புகுந்து இருக்கைகளை நனைத்தது. இதனால் கடும் அவதிக்குள்ளான பயணிகள், ஓரமாக நின்றபடியும், குடை பிடித்துக்கொண்டும் பயணித்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஓட்டை உடைசலான பேருந்துகளை அரசு பயன்பாட்டிலிருந்து நீக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.