​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் - போலீசார்

Published : Oct 21, 2019 5:18 PM

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் - போலீசார்

Oct 21, 2019 5:18 PM

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் காவலில் எடுக்கப்பட்ட சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட சுரேஷை கடந்த 14ஆம் தேதி அன்று போலீசார் காவலில் எடுத்தனர். 7 நாள் விசாரணை முடிவடைந்ததை அடுத்து திருச்சி நீதிமன்றத்தில் சுரேஷை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சுரேஷ், தன்னை போலீசார் தாக்கவில்லை என்றும் சரியான நேரத்திற்கு உணவு வழங்கியதாகவும் தெரிவித்தான்.

இதை அடுத்து அவனை நீதிமன்றக் காவலில் 4ஆம் தேதி வரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கறிஞருடன் சிறிது நேரம் பேசுவதற்கு சுரேஷுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லணை பகுதியில் சுரேஷ் புதைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.