​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் சாலையில் 5 இடங்களில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

Published : Oct 21, 2019 3:08 PM

கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் சாலையில் 5 இடங்களில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

Oct 21, 2019 3:08 PM

கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அடுக்கம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் செல்லும் பாதை கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் மற்றும் பெருமழையில் சேதமடைந்தது. இதனையடுத்து 99 கோடி ரூபாய் செலவில் சாலை சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது.

இதன் காரணமாக அடுக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் கொடைக்கானலுக்கோ, பெரியகுளத்துக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.