​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்து சமாஜ் கட்சி தலைவர் கொலை வழக்கு - போலிக் கணக்கு மூலம் கொலையாளி நண்பரானது அம்பலம்

Published : Oct 21, 2019 2:50 PM

இந்து சமாஜ் கட்சி தலைவர் கொலை வழக்கு - போலிக் கணக்கு மூலம் கொலையாளி நண்பரானது அம்பலம்

Oct 21, 2019 2:50 PM

இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர், பேஸ்புக்கில் போலிக் கணக்கு துவங்கி அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 18ம் தேதி கமலேஷ் திவாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

image

இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் அஸ்பாக் என்பவன், ரோகித் சோலன்கி என்ற பெயரில் முகநூலில் போலிக் கணக்குத் துவங்கி, கமலேஷ் திவாரியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் கொலை நிகழ்ந்த தினத்தன்று அவரை பார்ப்பதற்கு அனுமதி பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. மகேஷ் திவாரி கொல்லப்படுவதற்கு முன்பு கொலையாளிகள் அவருடன் 30 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்ததால், கொலையாளிகள் ஏற்கனவே அவருக்கு அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.