​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

Published : Oct 21, 2019 2:47 PM

சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

Oct 21, 2019 2:47 PM

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும், ஜெர்மனி மேம்பாட்டு முகமையும் இணைந்து  பருவநிலை மாற்றத்தால் வனசூழலியலில் ஏற்படும் தாக்கம் என்ற தலைப்பில்  ஒருநாள் கருத்தரங்கம் நடத்தியது.

இதில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா, வனத்துறை முதன்மை பாதுகாவலர் துரைராசு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான சான்றிதழ்கள் மாநில அரசிடம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.