​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்காட்சியில் பொருள் வாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள் - நடிகை பிரியா ஆனந்த்

Published : Oct 21, 2019 2:12 PM

கண்காட்சியில் பொருள் வாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள் - நடிகை பிரியா ஆனந்த்

Oct 21, 2019 2:12 PM

சென்னையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை குறைந்துள்ளதாகசென்னை குடிநீர் வாரிய தலைமைப்பொறியாளர் அப்துல் கூறினார்.

மயிலாப்பூரில் உள்ள எச்எஸ்பிசி வங்கியின் தலைமையகத்தில், ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக, தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பில் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் கை வண்ணத்தில் தயாரான,பெண்களுக்கான கலை நயமிக்க பல வடிவங்களிலான கைப்பைகள், அழகு சாதன பொருட்கள், பேன்சி நகைகள், கைத்தறி ஆடைகள், சேலைகள் மற்றும் எண்ணற்ற கைவினைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளது.

கண்காட்சியை தொடங்கி வைத்த சென்னை குடிநீர் வாரிய தலைமைப்பொறியாளர் அப்துல் கூறுகையில், மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுவதாகவும் கூறினார்.

இந்த கண்காட்சிக்கு மக்கள் அதிக அளவில் வருகை தந்து பொருட்கள் வாங்கி, ஏழை குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட உதவவேண்டும் என்று நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.