​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஞ்சநேயர் கற்சிலை திருட்டு? பெண் உள்ளிட்ட 5 பேருக்கு வலை

Published : Oct 21, 2019 1:27 PM

ஆஞ்சநேயர் கற்சிலை திருட்டு? பெண் உள்ளிட்ட 5 பேருக்கு வலை

Oct 21, 2019 1:27 PM

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் இரண்டடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கற்சிலையை திருடியதாக பெண் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

துர்க்காம்பிகை கோவில் என்றழைக்கப்படும் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் ராம தீர்த்தம் அருகே சுமார் இரண்டடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன ஆஞ்சநேயர் சிலை வழிபாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் பூஜை நேரத்தின் போது இந்த சிலை மாயமானது அர்ச்சகர்களுக்கு தெரியவரவே உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த பட்டீஸ்வரம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது அதில் காரில் வந்திறங்கிய ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கோவிலுக்குள் நுழைவதும் பின்னர் கையில் ஒரு பெரிய பையுடன் வெளியேறுவதும் சிசிடிவியில் பதிவாகியிருந்துள்ளது.