​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

Published : Oct 21, 2019 1:02 PM

காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

Oct 21, 2019 1:02 PM

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கடப்பா அருகே நிலுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்கிரண்.

இவர், துபாயில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த தாய் முனியம்மாவை அழைத்துக் கொண்டு ஓட்டுநர் பவன் கல்யாணுடன் சொந்த ஊருக்கு காரில் திரும்பியுள்ளார்.

அதிகாலையில் ஓபுலவாரிபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது கார் மீது, மகராஷ்டிராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காரில் சென்ற முனியம்மாள், சாய் கிரண், பவன் கல்யாண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.