​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரம் முக்கிய கடைவீதிகளில் களை கட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங்

Published : Oct 21, 2019 11:08 AM

ராமநாதபுரம் முக்கிய கடைவீதிகளில் களை கட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங்

Oct 21, 2019 11:08 AM

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி ராமநாதபுரம் முக்கிய கடை வீதிகளில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

இதனால் புத்தாடைகள், நகைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பட்டாசு உள்ளிட்டவற்றின் விற்பனை களை கட்டியுள்ளது.

அரண்மனை பவுண்ட் கடைத்தெரு, நகைக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய வணிக பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மேலும் பண்டிகைக் காலத்தையொட்டி சிறப்புக் கடைகளும் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.