​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்

Published : Oct 21, 2019 10:08 AM

இடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்

Oct 21, 2019 10:08 AM

தமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடைபெற்று வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 275 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி, அந்தத் தொகுதியில் 13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்  299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி அந்தத் தொகுதியில், 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.