​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திகார் சிறையில் இன்று சிவகுமாரை சந்திக்கிறார் சோனியா காந்தி

Published : Oct 21, 2019 8:10 AM

திகார் சிறையில் இன்று சிவகுமாரை சந்திக்கிறார் சோனியா காந்தி

Oct 21, 2019 8:10 AM

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று நேரில் சந்திக்க உள்ளார்.கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சிவகுமார் மீது பணப்பரிமாற்றத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை திகார் சிறை சென்று ப.சிதம்பரத்தை சந்தித்த சோனியா காந்தி இரண்டாவது முறையாக திகார் சிறைக்கு செல்வது கட்சிக்கும் அரசுக்கும் மறைமுகமாக விடுக்கும் செய்தியாக கருதப்படுகிறது.

ப.சிதம்பரம், டி,கே.சிவகுமார் , பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே திகார் சிறையில் இருக்கும் டி.கே.சிவகுமாரை சந்திக்க சிறை அதிகாரிகளிடம் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் அவர் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் அனுமதி கோரியுள்ளனர்.