​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிரம்பும் நிலையில் கன்னங்குறிச்சி புது ஏரி

Published : Oct 21, 2019 7:42 AM



நிரம்பும் நிலையில் கன்னங்குறிச்சி புது ஏரி

Oct 21, 2019 7:42 AM

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏற்காட்டிலும் தொடர்மழை பெய்ததன் காரணமாக அதன் அருகே உள்ள மஞ்சகுட்டை பகுதிகளில் இருக்கும் எஸ்டேட் பகுதியிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நீர் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு வந்து சேர்வதால் அந்த ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

கடந்த 2வருடங்களாக காய்ந்து கிடந்த புது ஏரி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. அதிக தண்ணீர் வருவதால் பொதுமக்கள் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு வந்து ஏரியின் அழகை ரசித்து செல்கின்றனர்.