​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.37.6 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

Published : Oct 20, 2019 6:03 PM

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.37.6 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

Oct 20, 2019 6:03 PM

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நலிப் மற்றும் சென்னையைச் சேர்ந்த சையது அப்துல் ரகீம் ஆகியோர் 34 கேரட் சுத்த தங்கத்தை உருக்கி, மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 37 லட்சத்து ஆறாயிரம் (ரூ.37.6) மதிப்பிலான 949 கிராம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றன.