​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி7 தலைவர்கள் மாநாடு திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்

Published : Oct 20, 2019 5:48 PM

ஜி7 தலைவர்கள் மாநாடு திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்

Oct 20, 2019 5:48 PM

ஜி-7 அமைப்பு தலைவர்கள் மாநாட்டை தனது கோல்ப் விடுதியில் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் கைவிட்டுவிட்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் உள்ள கோல்ப் சொகுசு விடுதியில் 2020ம் ஆண்டில் ஜி-7 அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு டிரம்ப் திட்டமிட்டிருந்தார். 

இதற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிபர் பதவியை டிரம்ப் தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் விமர்சித்தனர். இதையடுத்து தனது திட்டத்தை டிரம்ப் கைவிட்டு விட்டார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியால் ஜி7 தலைவர்கள் மாநாட்டை மியாமி கோல்ப் விடுதியில் நடத்துவது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட திட்டம், ஜனநாயக கட்சியினர், ஊடகத்தினரின் எதிர்ப்பால் கைவிடப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஜி-7 தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு கேம்ப் டேவிட் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.