​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடுமையான காற்று மாசுபாட்டிலும் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி

Published : Oct 20, 2019 3:17 PM

கடுமையான காற்று மாசுபாட்டிலும் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி

Oct 20, 2019 3:17 PM

கடுமையான காற்றுமாசுபாடு உள்ள நிலையிலும் டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசுபாடு அதிகரித்து வருவதால் அங்கு வசிப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், எத்தோப்பியன் நாட்டை சேர்ந்த வீரர் ஆண்டம்லக் பெலிஹூ இலக்கை எட்டியதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜுஜூ கையால்  சாம்பியன் பட்டம் பெற்றார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகரில் காற்று மாசு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் முன்கூட்டியே மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள்  வெளியே செல்வதை கூடியமட்டிலும் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.