​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.4.64 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

Published : Oct 20, 2019 12:38 PM

மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.4.64 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

Oct 20, 2019 12:38 PM

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில், 4 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட் மெட்ரோ ரயில் நிலையத்தின் 8வது நடைமேடையில் டிராவல் பேக் ஒன்று நீண்ட நேரமாக கிடப்பதாக மத்திய பாதுகாப்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேக் கிடந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் சோதனையிட்டதில், அதில் 4 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

ஐநூறு ரூபாய் நோட்டுகளாக இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை டெல்லி மெட்ரோ ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.