​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏழைகள் கைகளில் பணத்தை தாருங்கள் - அபிஜித் பானர்ஜி

Published : Oct 20, 2019 8:11 AM

ஏழைகள் கைகளில் பணத்தை தாருங்கள் - அபிஜித் பானர்ஜி

Oct 20, 2019 8:11 AM

வேலைவாய்ப்பின்மையை யாருமே விரும்பாத நிலையில், தனியார் நிறுவனங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நோபல் விருது பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஒரு இயந்திரம் மலிவான செலவில் வேலை செய்யும் என்றால் ஊழியரை வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் யோசிக்கவே யோசிக்காது என்று அவர் குறிப்பிட்டார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது பொருளாதார கருத்துகளை குறித்த விளக்கம் அளித்தார்.

செலவு செய்யும் மனிதர்கள் கையில் பணம் புரள வேண்டும் என்று அபிஜித் வலியுறுத்தினார். மக்களிடம் பணம் இல்லை என்றால் அவர்கள் பிஸ்கட் வாங்கப் போவதில்லை என்றும், அவ்வாறு வாங்காவிட்டால் பிஸ்கட் கம்பெனி இழுத்து மூடப்பட்டு விடும் என்றும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

பொருளாதார சரிவை மீட்க, ஏழை மக்களின் கைகளில் நிறைய பணத்தை தர வேண்டும் என்றும் அபிஜித் பானர்ஜி தெரிவித்தார். முன்னதாக டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவர், மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பத்து நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.