​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுரங்கத்தினுள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழப்பு

Published : Oct 20, 2019 7:49 AM

சுரங்கத்தினுள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழப்பு

Oct 20, 2019 7:49 AM

ரஷ்யாவில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

சைபீரியாவில் தங்கச் சுரங்கத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த அணை ஒன்று திடீரென உடைந்ததால் சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த விபத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் மாயமானதாக ரஷ்ய அவசரகாலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அருகில் உள்ள சில சுரங்கங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் நிகழ்விடத்தில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.