​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 117 கோடியாக உயர்வு

Published : Oct 20, 2019 7:29 AM

செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 117 கோடியாக உயர்வு

Oct 20, 2019 7:29 AM

நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 117 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 116 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 84 லட்சத்து 45 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். வோடபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து 49 லட்சத்து 56 ஆயிரம் பேரும், பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 5 லட்சத்து 61 ஆயிரம் பேரும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து 2 லட்சத்து 36 ஆயிரம் வாடிக்கையாளர்களும் வெளியேறி உள்ளனர்.

தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரம் குறைந்து 2 கோடியே 6 லட்சமாக சரிந்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் ஒரு லட்சத்து 41 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.