​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

Published : Oct 19, 2019 9:05 PM

மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

Oct 19, 2019 9:05 PM

மனவளர்ச்சி குன்றிய மதுரை சிறுவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த ராமசாமி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மனவளர்ச்சி குன்றிய தனது மகன் சிவனேஷ்,கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வீட்டருகே உள்ள கழிவறைக்கு சென்ற  பின்னர் காணவில்லை எனவும், இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் அளித்தும் பயனில்லை எனவும் கூறியுள்ளார்.

வீட்டு அருகே கேமரா வசதியுடன் வணிக வளாகங்கள் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்தால்  போதுமான தடயங்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கடத்தி கொத்தடிமைகளாகவும், அவர்களது உடல்பாகங்களை சிலர் திருடி விற்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

எனவேமகன் வழக்கை மேலூர் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை மேலூர் காவல்நிலையத்திடம் இருந்து திரும்ப பெற்று மதுரை சிபிசிஐடி (ஓசியூ) டிஎஸ்பி விசாரிக்கவும்,  விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.