​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Published : Oct 19, 2019 8:37 PM

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Oct 19, 2019 8:37 PM

நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 299 வாக்குச்சாவடிகளிலும் தடையில்லா மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர், கழிவவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் திங்களன்று நடைபெறும் நிலையில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இதனை தெரிவித்த ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ப்ரெய்லி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி, 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் தற்போது வரை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 22,95,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 112 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.