​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெடிவிதை பட்டாசுகளை அறிமுகம் செய்தது வேளாண் - தோட்டக்கலை துறை

Published : Oct 19, 2019 8:25 PM

வெடிவிதை பட்டாசுகளை அறிமுகம் செய்தது வேளாண் - தோட்டக்கலை துறை

Oct 19, 2019 8:25 PM

தீபாவளி பண்டிகையை ஒட்டி, மக்களிடையே சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வேளாண் மற்றும் தோட்டக்கலை இணைந்து வெடிவிதை பட்டாசுகளை அறிமுகம் செய்துள்ளது.

நிலத்தடி நீர் சேமிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தம் விதமாக வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடிக்காத, வெடிவிதை பட்டாசுகளை வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

நுண்ணூட்ட சத்துக்கள், உரங்களை பயன்படுத்தி சங்கு சக்கரம், ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகள் வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த வெடிவிதைக்குள் காய்கறி, பூஞ்செடி விதைகள் வைக்கப்பட்டுள்ளன.

வெடியின் மாதிரி வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விதை பந்துகள் வரும் திங்கள் கிழமை முதல், மாதவரம் தோட்டகலை அலுவலகம், செம்மொழி பூங்கா பகுதிகளில் விற்பனைக்கு வரவுள்ளன. இதேபோல் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளும் அந்தந்த மாவட்ட தோட்டக்கலை அலுவலகங்களில் 2 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.