​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் பேரம் பேசிய ஆடியோ - விசாரணை நடத்த குழு அமைப்பு

Published : Oct 19, 2019 6:18 PM

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் பேரம் பேசிய ஆடியோ - விசாரணை நடத்த குழு அமைப்பு

Oct 19, 2019 6:18 PM

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் குளோபல் மருத்துவமனை நிர்வாகி பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் குளோபல் மருத்துவமனையின் நிர்வாகி பாஸ்கர் ரெட்டி, நோயாளிகளை தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ஆடியோ ஒன்றும் வெளியான நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்ட பட்டியலிலிருந்து குளோபல் மருத்துவமனை தற்காலிகமாக நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக 3 பேர் கொண்ட குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சுகதாரத்திட்ட இயக்குநரகத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் சின்னம்மாள் தலைமையில், தலைமை கணக்காளர் பரணிகுமார் மற்றும் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி திட்ட இயக்குநரக அதிகாரி சம்சத் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.