​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்

Published : Oct 19, 2019 6:15 PM

நிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்

Oct 19, 2019 6:15 PM

கேரள மாநிலம் மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி மாயமான ஜேசிபி ஓட்டுநர் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது பெற்றோர் பிடிமண் எடுத்துச் சென்ற  உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது.

மூணாறு அருகே லாக்காடு கேப்ரோட்டில் கடந்த 8ஆம் தேதி சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றபோது, நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியிலிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த உதயன் என்பவர் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநரான தமிழரசன் என்பவர், இடிபாடுகளில் சிக்கி மாயமானதால், அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தமிழரசனின் தந்தை குமரவேல்,தாயார் வனிதாமணி உள்ளிட்டோரும் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். இதனிடையே, பாறைகள் மலைபோல குவிந்துள்ளதால் தேடுதல் பணியை மேற்கொண்டு தொடரமுடியவில்லை என கூறி, இரு தினங்களுக்கு முன்பு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாயமான தமிழரசனுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்துக்கொண்டு அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு திரும்பினர். உருக்கமான இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.