​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம்

Published : Oct 19, 2019 8:07 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம்

Oct 19, 2019 8:07 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து கஞ்சனூர், ஏழுசொம்பொன் மற்றும் நேமூர் ஆகிய பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் திறந்த வேனில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், இந்த இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் வாங்க முடியாத அளவிற்கு படுதோல்வி அடையும் என்றும் அதனை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் கூறினார்.