​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்கி ஆசிரமத்தில் பணம்-நகை பறிமுதல்..!

Published : Oct 19, 2019 7:25 AM

கல்கி ஆசிரமத்தில் பணம்-நகை பறிமுதல்..!

Oct 19, 2019 7:25 AM

கல்கி சாமியார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணாவினால் "வெல்னஸ் குரூப்" என்ற பெயரில் நிர்வகிக்கப்படும் இந்த குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்தது.

இதையடுத்து கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் 3 நாட்களாக வருமானவரித்துறை நடத்திய சோதனை நிறைவுபெற்று, ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வருமானவரித்துறை விடுத்துள்ள அறிக்கையில், 2014ஆம் ஆண்டு முதல் 409 கோடி ரூபாய் அளவிற்கான வருவாயை கல்கி சாமியார் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், 500 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ரொக்கமாக 43 கோடியே 90 லட்சம் ரூபாய் இந்தியப் பணமும், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றபட்டுள்ளன.

இவை தவிர, 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 1271 காரட் வைரம் என மொத்தமாக 93 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.