​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"2014க்குப் பின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசின் திட்டங்களே" - ராகுல்காந்தி

Published : Oct 19, 2019 6:31 AM

"2014க்குப் பின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசின் திட்டங்களே" - ராகுல்காந்தி

Oct 19, 2019 6:31 AM

ஹரியானாவில் மகேந்திர கர் எனுமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்று விமர்சித்த ராகுல் காந்தி, 2014ம் ஆண்டுக்குப் பிறகு தாம் அமெரிக்காவின் புகழ் பெற்ற 2 அல்லது 3 பொருளாதார நிபுணர்களை சந்தித்துப் பேசியதாக நினைவுகூர்ந்தார்.

அப்போது ஏற்பட்ட வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நூறுநாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடியும்தான் முக்கியக் காரணங்களாக இருந்தன என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருந்த நேரத்தில் அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக தாம் பிரச்சாரம் செய்ய வந்ததாக கூறிய ராகுல் காந்தி, கடைசி நொடியில் தன்னை அழைத்தாலும் வந்துவிடுவதாகக் குறிப்பிட்டார்.