​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரோ விஞ்ஞானி உயிரிழந்த விவகாரம் - 8 வாரங்களில் விசாரணை முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

Published : Oct 18, 2019 7:31 PM

இஸ்ரோ விஞ்ஞானி உயிரிழந்த விவகாரம் - 8 வாரங்களில் விசாரணை முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

Oct 18, 2019 7:31 PM

நெல்லை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி உயிரிழந்த விவகாரத்தில், பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் 8 வாரத்தில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த விஞ்ஞானி தினேஷின் மனைவி அலோசியஸ் பிரான்சிஸ்கோ உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவரும், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானியுமான தினேஷ் கடந்த ஜூலை 17ம் தேதி நண்பர்களுடன் கன்னியாகுமரி அருகே உள்ள ஆனந்தன் கால்வாயில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்தார்.

ஆனால்  தினேஷின் உடலில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததால், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார் . மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் பூதப்பாண்டி போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால்,  விசாரணையை  காவல்துறையின் வேறு அமைப்புக்கு மாற்ற  கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஞ்ஞானி தினேஷின் மரணம் தொடர்பான விசாரணையை பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் 8 வாரங்களுக்குள் முடிக்கவேண்டும் என்றும்  விசாரணையை குமரி மாவட்ட எஸ்.பி. கண்காணிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி , வழக்கை முடித்து வைத்தார்.