​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published : Oct 18, 2019 7:11 PM

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Oct 18, 2019 7:11 PM

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஊர்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என்றார். வாக்களித்த மக்களை நினைக்காமல், மக்களுக்கு நன்மைகளை செய்ய எண்ணாமல், பதவிக்கு ஆசைபட்டு மக்களுக்கு துரோகம் செய்ததால் இடைத் தேர்தலை சந்திக்கும் நிலை வந்துள்ளதாக அவர் கூறினார்.

யாருக்கு வாக்களித்தால் நன்மை என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்கவேண்டும் என்ற முதலமைச்சர், ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றார்.
எதிர்கட்சிகள் அரசை அணுகமாட்டார்கள் என்றும் அவர்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு பலன் கிடையாது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிகாப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக குடியரசு துணை தலைவர் கையால் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.  திமுக ஆட்சி காலத்தில் இருந்த இடைவிடாத மின் வெட்டில் இருந்து தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு தான் என்று அவர் தெரிவித்தார்.