​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புழுக்கமாக இருந்ததால் விமானத்தின் அவசர கால கதவைத் திறந்த பயணி..!

Published : Apr 30, 2018 10:07 PM

புழுக்கமாக இருந்ததால் விமானத்தின் அவசர கால கதவைத் திறந்த பயணி..!

Apr 30, 2018 10:07 PM

சீனாவில் விமானத்தில் புழுக்கமாக இருப்பதாகக் கூறி அவசரகாலக் கதவைத் திறந்த பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 27-ம் தேதி த லக்கி ஏர் என்ற விமானம் மியாங்யாங் நஞ்சியாவோ (Miangyang Nanjiao) விமான நிலையத்துக்கு வந்தது. பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கிக் கொண்டிருந்தனர். மதிய நேரத்தில் வெயில் புழுக்கமாக இருந்ததாலும், கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பயணி ஒருவர் தமது இருக்கைக்கு அருகில் இருந்த அவசரகாலக் கதவைத் திறந்தார்.

அவசர கால கதவு என்பதால் கையோடு வந்து விழுந்து கிடந்தது. இதைக் கண்ட விமான நிறுவன ஊழியர்கள் அவரைப் பிடித்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழுக்கமாக இருந்ததால் காற்று வர வேண்டி திறந்ததாக வாக்குமூலம் அளித்த அந்தப் பயணியிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.