​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பி.டி.ராசன், தந்தை பெரியாறு கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published : Oct 18, 2019 3:09 PM

பி.டி.ராசன், தந்தை பெரியாறு கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

Oct 18, 2019 3:09 PM

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பி.டி.ராசன் மற்றும் தந்தை பெரியாறு கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அணையின் பி.டி.ராசன் கால்வாய் மற்றும் தந்தை பெரியாறு கால்வாய் மூலம் சின்னமன்னூர், சீலையம்பட்டி, தர்மபுரி, கோவிந்தா நகரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

142 அடி நீர்தேக்கம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 124 புள்ளி 75 அடியாக உள்ளநிலையில், பி.டி.ராசன் மற்றும் தந்தை பெரியாறு கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்துவைத்தார். 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும், விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக முல்லைப்பெரியாரின் லோயர் கேம்ப் 18 ம் கால்வாயில் இருந்து, உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவில் உள்ள 4 ஆயிரத்து 614 ஏக்கர் பாசனத்துக்காக 44 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.