​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வளரும் நாடுகளிலேயே தமிழகத்தில்தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்வதாக அமைச்சர் பெருமிதம்

Published : Oct 18, 2019 1:58 PM

வளரும் நாடுகளிலேயே தமிழகத்தில்தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்வதாக அமைச்சர் பெருமிதம்

Oct 18, 2019 1:58 PM

வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிகளவாக 49 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்வதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்திய அளவில் தொலைநிலைக் கல்வி முறையை திறம்படச் செயல்படுத்தி வரும் ஆறு மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாகக் கூறினார்.