​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா ஸ்நான நிகழ்ச்சி

Published : Oct 18, 2019 12:31 PM

காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா ஸ்நான நிகழ்ச்சி

Oct 18, 2019 12:31 PM

திருச்சி திருப்பராய்த்துறையில் காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா ஸ்நானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர்.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமம் என்பதும் ஐப்பசி முதல் நாளில் திருப்பராய்த்துறையிலும், கடைசி நாளில் மயிலாடுதுறையிலும் நீராடி சிவதலங்களில் வழிபாடு செய்தால் நன்மை பெருகும் என்பதும் நம்பிக்கை.

ஐப்பசி முதல் நாளான இன்று சூரியோதய நேரத்தில் திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் உற்சவர் வீதியுலா நடைபெற்றது. காவிரிக்கரைக்கு உற்சவருடன் கொண்டுவரப்பட்ட ஆஸ்திரதேவரை ஆற்றுக்குள் கொண்டு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகண்ட காவிரியில் புனித நீராடினர். துலா ஸ்நானத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.