​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு

Published : Oct 18, 2019 12:14 PM

சிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு

Oct 18, 2019 12:14 PM

சிரியாவின் அலெப்போ நகரத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான சந்தை, 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய மிகுந்த நகரங்களின் பட்டியலில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள ‘al-Saqatiyah ’ என்ற சந்தை இடம்பெற்றுள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த இந்த சந்தை, போரில் சிதிலமடைந்தது. மேலும் தொடர்ச்சியாக அங்கு போர் பதற்றம் நிலவவே, கடந்த 7 ஆண்டுகளாக அங்குள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. அப்பகுதியில் போர் ஓய்ந்த நிலையில் அண்மையில் இந்த சந்தை மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அங்கு கடைகள் திறந்த வியாபாரிகள் இறைச்சி, பாதம் மற்றும் உலர் பழங்கள், இனிப்பு வகைகளை விற்க தொடங்கியுள்ளனர்.