​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் தியாகராயநகர்

Published : Oct 18, 2019 12:11 PM

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் தியாகராயநகர்

Oct 18, 2019 12:11 PM

தீபாவளி ஷாப்பிங் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், சென்னை தியாகராய நகரில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள், முகத்தை ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறியக்கூடிய ஃபேஸ்டேகர் வசதியுடன் கூடிய கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றையும், ட்ரோன்களின் இயக்கத்தையும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

image

image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், தியாகராய நகர் பகுதியில் 1200 சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்றும், மேலும் 100 சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

image

கடந்த 2 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது தியாகராயநகர் பகுதியில் எந்த ஒரு குற்ற சம்பவமும் நடைபெறவில்லை என கூறிய அவர், இந்த ஆண்டும் குற்றசம்பவங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.