​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிநீக்கம்

Published : Oct 18, 2019 8:02 AM

திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிநீக்கம்

Oct 18, 2019 8:02 AM

திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் தனலட்சுமியை ஆளுநரின் உத்தரவின் படி பணி நீக்கம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி அரசாணை வெளியிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட  மகளிர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்த  தனலட்சுமி மீது குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக வாதாடுவது, பாதிக்கப்பட்டவர்களிடம் சமரசம் செய்து வைப்பதாக கூறி மிரட்டுவது உள்ளிட்ட  பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இந்நிலையில்  மாதவரம் மற்றும் சோழவரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிக்கு சாதகமாக அரசு தரப்பு வழக்கறிஞர்  செயல்படுவதாகவும், சிறுமிகளை பணம் பெற்றுக் கொண்டு வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டியதாகவும் கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட  சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில்  திடீரென அரசு தரப்பு வழக்கறிஞர் தனலட்சுமியை பதவி நீக்கம்  செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.