​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
படேல் பிறந்த தினம்: காவல்துறை அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

Published : Oct 18, 2019 7:45 AM



படேல் பிறந்த தினம்: காவல்துறை அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

Oct 18, 2019 7:45 AM

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை அலுவலகங்களில் படேலின் உருவப்படங்களை காட்சிப்படுத்தவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் முன்னாள் துணைப் பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலின் 144ஆவது பிறந்த தினம் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை அலுவலகங்களில் படேலின் உருவப்படங்களையும், நாட்டு மக்களுக்கு அவர் கூறிய செய்திகளையும் காட்சிப்படுத்தவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

குஜராத்தில் அமைந்துள்ள படேலின் மிக பிரமாண்டமான சிலை அருகே, மிகப்பெரிய அளவிலான போலீஸ் அணிவகுப்பு நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.