​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டுக்கு அருகே அனுமதியின்றி பைக்கை நிறுத்தியதால் பைக்கை தீ வைத்து கொளுத்திய நபர்

Published : Oct 18, 2019 7:21 AM



வீட்டுக்கு அருகே அனுமதியின்றி பைக்கை நிறுத்தியதால் பைக்கை தீ வைத்து கொளுத்திய நபர்

Oct 18, 2019 7:21 AM

புதுச்சேரியில், தனது வீட்டுக்கு அருகே எதிர்வீட்டுக்காரர் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் வாகனத்தை தீ வைத்து கொளுத்தியவர் கைதுசெய்யப்பட்டார்.

லாஸ்பேட்டை கொட்டுபாளையத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர், தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்த இடமில்லாததால் எதிர் வீட்டின் அருகே நிறுத்திவந்ததால் எதிர் வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துவந்துள்ளது.

இதனிடையே நாராயணன் மீண்டும் அதேபோல வாகனத்தை எதிர்வீட்டின் அருகே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், இரவு நேரத்தில் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகின.

இதையடுத்து நாராயணன் அளித்த புகாரின் பேரில் சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.