​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக உதவத் தயார் - சீனா

Published : Oct 18, 2019 7:10 AM



காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக உதவத் தயார் - சீனா

Oct 18, 2019 7:10 AM

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்ய விரும்புவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான நட்புறவை பாகிஸ்தானுடனான நட்புடன் ஒப்பிடக்கூடாது என்றும், அது சுதந்திரமானது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ வெளியிட்ட அறிக்கையில், மூன்றாம் நாட்டின் குறுக்கீடு இல்லாமல் இந்தியா - பாகிஸ்தானுடன் சீனாவின் உறவு தனித்தனியாக இயங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தியா, நேபாள பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இதனையே தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான நட்பு நாடாக இருக்கும் சீனா, இந்தியாவுடனான நட்பு மேலும் வலிமை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் முரண்பாட்டைத் தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் சீனா கோரியுள்ளது. கூட்டுறவு மூலம் எதிர்கால நலனை கருதி செயல்பாடுமாறும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.