​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ப.சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை வழங்க அனுமதி

Published : Oct 18, 2019 6:51 AM

ப.சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை வழங்க அனுமதி

Oct 18, 2019 6:51 AM

அமலாக்க துறை காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளை அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஏற்கனேவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிறையில் வைத்தே நேற்று முன்தினம் மீண்டும் கைது செய்தது.

இந்த வழக்கில் ப. சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் அனுமதி வழங்கும்படி டெல்லி நீதிமன்றத்திடம் அமலாக்க துறை அனுமதி கோரியிருந்தது. ஆனால் அக்டோபர் 24ந்தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குமார் அனுமதி வழங்கினார்.

ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை, மருந்துகள், ஏசி, மூக்குகண்ணாடி, குடும்பத்தினர் பார்க்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை, மருந்துகள் ஆகியவற்றை வழங்க மட்டும் நீதிபதி அனுமதி அளித்தார்.