​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Published : Oct 18, 2019 6:47 AM



வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Oct 18, 2019 6:47 AM

லண்டனில் சிறையில் உள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி (48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்திய அரசின் நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.