​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி

Published : Oct 17, 2019 9:22 PM

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி

Oct 17, 2019 9:22 PM

சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி முதல்வரின் தவறான அணுகுமுறையால் கடந்த 2018ம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்ததால், அரசின் சலுகைகளை பெற மாற்றுச்சான்றிதழ் வாங்க கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி கல்லூரிக்குச் சென்ற தன்னை, கல்லூரி முதல்வர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யதாக கூறியுள்ளார்.

செப்டம்பர் 11ம் தேதி திருமணம் ஆன தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது 3 மாத கர்ப்பமாக உள்ளதை உறுதி செய்த மருத்துவர்கள், கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, தாய்வீட்டில் மன உளைச்சலுடன் வாழ்ந்து வருவதாகவும், தனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கருவை கலைக்க அனுமதிக்க கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் கலைக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியதுடன், குற்றவாளியை உறுதி செய்ய உதவும் வகையில் கருவின் டிஎன்ஏ மாதிரியை சேமித்து வைக்க சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.