​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக தகவல்

Published : Oct 17, 2019 6:49 PM

டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக தகவல்

Oct 17, 2019 6:49 PM

சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக, துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்நாட்டின் குர்து படைகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கா, தனது  துருப்புகளை அண்மையில் திரும்பப் பெற்றது.

அதுமுதல் வடக்கு சிரியா பகுதிகளில் வாழும் குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து துருக்கி அதிபர் எர்டகனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், முட்டாள்தனமாக செயல்படாமல், ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம் என டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு எர்டகன் காரணமாக வேண்டாம் என கூறிய டிரம்ப், துருக்கியின் பொருளாதாரம் அழிவதற்கு தானும் பொறுப்பாக விரும்பவில்லை எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்தின் நகலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள நிலையில், துருக்கி அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் குப்பை தொட்டியில் வீசப்பட்டதாக துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.