​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாண் பல்கலை. ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

Published : Oct 17, 2019 6:27 PM

வேளாண் பல்கலை. ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

Oct 17, 2019 6:27 PM

கோவையில் வீட்டில் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும் போதே பீரோவில் இருந்து 40 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பிரமணி என்பவர் காளம்பாளையத்தில் மனைவி தேவசேனா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு சுப்பிரமணி குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், தேவசேனா கழுத்தில் இருந்து 8 சவரன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென முழித்துக் கொண்ட தேவசேனா கூச்சலிடவே மர்மநபர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டை சோதனையிட்டதில் வாயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி பேரூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.