​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உணவுக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published : Oct 17, 2019 4:59 PM

உணவுக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Oct 17, 2019 4:59 PM

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவுக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது.

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும், உணவுப் பதுகாப்புத் துறையும் இணைந்து எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின. இந்நிகழ்ச்சியில், உணவுப் பொருட்கள் உள்ள கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது தொடர்பாக விளக்கப்பட்டது.

உணவுக் கலப்படம் தொடர்பாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் விஜய திலகம் உணவுப் பாதுபாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு  எடுத்துரைத்தனர். உணவை வீணடிக்கக் கூடாது என்றும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.