​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்

Published : Oct 17, 2019 2:46 PM

உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்

Oct 17, 2019 2:46 PM

உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு சென்னையில் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும், மருத்துவ மாணவர்கள் கொட்டும் மழைக்கிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாலை விதிகளை கடைப்பிடித்தல் தலைக்கவசம் அணிதல் உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள், வாகனங்களில் சென்றவர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் விபத்து தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குளோபல் மருத்துவமனை ஆடியோ விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு விபத்து தடுப்பு மற்றும் அவசரச் சேவை திட்டமான தாய் திட்டம் தமிழகம் முழுவதும் 80 மருத்துவமனைகளில் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் கூறினார்.

தாய் திட்டத்தின் மூலம் விபத்துக்குள்ளானவர்களுக்கான உடனடி சிறப்பு ஆம்புலன்ஸ் வசதிகள், சிகிச்சையை விரைவுபடுத்தும் அதிநவீன வசதிகள் உள்ளிட்டவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன