​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டின் ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா?

Published : Oct 17, 2019 2:08 PM

நாட்டின் ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா?

Oct 17, 2019 2:08 PM

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பார்லியில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை ரத்து செய்யும் முடிவு, நாட்டை அழித்துவிடும் என ஒரு காங்கிரஸ் தலைவர் பேசியதாகவும், இந்த முடிவை எடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நாடு என்ன அழிந்தா போய்விட்டது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். 370ஆவது பிரிவை ரத்து செய்யும் முடிவால் காஷ்மீரை இழக்க நேரிடும் என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறியதையும்  குறிப்பிட்ட மோடி, இப்போது இந்தியா காஷ்மீரை இழந்துவிட்டதா என்றும் வினவினார்.

காஷ்மீர் சென்றுபார்க்க விரும்பினால் அதற்கான ஏற்பாட்டை தாம் செய்வதாகவும் மோடி குறிப்பிட்டார்.  காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு பதில் இந்துக்கள் இருந்திருந்தால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை பாஜக அரசு ஒருபோதும் எடுத்திருக்காது என ஒரு வேறொரு காங்கிரஸ் தலைவர் கூறியதாக குறிப்பிட்ட மோடி, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லிம் என்றா பார்க்கிறீர்கள் எனவும் காங்கிரஸ்காரர்களை சாடினார்.